ஐக்கிய மக்கள் சக்தியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இணையவுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாகவும் இருப்பினும் அந்த ஐந்து பேரும் அமைச்சரவையில் இணையமாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சமூக ஜனநாயக முறைப்படி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஏனைய நாடுகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைகள் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கான உதவிகளை ஏன் பெற முடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.