இலங்கையில் கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடி ரூபாவிலிருந்து 50 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இவ்வரி அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பந்தய (நேரலை) நிலையங்களுக்கான வருடாந்த வரி 6 லட்சம் ரூபாவிலிருந்;து 10 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையங்களின் வருமான வரி 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பந்தய உப முகவர் நிலையங்களுக்கான வருடாந்த வரி 4 லட்சம் ரூபாவிலிருந்து 5 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேரலையற்ற பந்தய நிலையங்களுக்கான வரி 50,000 ரூபாவிலிருந்து 75,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.