இடைநிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான ஏரோப்ளோட் விமான
சேவையின் வணிக பிரிவு விமான சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ஏரோப்ளோட் நிறுவனம் மற்றும் விமான நிலைய தகவல் மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய ரஷ்யாவின் மொஸக்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட முதலாவது வணிக விமானம் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் இலங்கைக்கு ரஷ்ய சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.