நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார்.
அத்துடன், 8 வீடுகள் முழுமையாகவும், 443 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
1,927 குடும்பங்களைச் சேர்ந்த 7,669 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை தொடரும்
அதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று(26) மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று(26) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கம் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.