அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 45 இலங்கையர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியா நோக்கி படகில் செல்வதற்காக உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகலிடம் கோரிய 183 இலங்கை பிரஜைகளை அவுஸ்திரேலியா அண்மையில் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவை அடைய சுமார் 21 நாட்கள் ஆகும். கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு மக்களை படகுகளில் கடத்துவதை நாங்கள் நிறுத்துவோம். கப்பலில் உள்ளவர்களை அவர்கள் புறப்படும் இடம் அல்லது சொந்த இடத்துக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவோம். தேவைப்பட்டால், அவர்களை ஒரு பிராந்திய நாட்டிற்கு மாற்றுவோம்” என்று அவுஸ்திரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.