இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயிற்சி போட்டியில் இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் 189 என்ற வெற்றியிலக்கை நோக்கி விளையாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் மஹீஷ் தீக்ஷன மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.