லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் 30 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தால், மருத்துவமனையின் பல பிரிவுகளுக்கான மின் இணைப்பை மின்சார சபையினர் புதன்கிழமை துண்டித்ததால் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.
புதன் கிழமை (26) உணவகங்கள் மற்றும் பாதுகாப்பு அலுவலகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, ஆனால் அது மருத்துவமனை நோயாளிகளின் சிகிச்சை மையங்களை பாதிக்கவில்லை என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளர் கலாநிதி விஜேசூரிய தெரிவித்துள்ளார்
எமது பாவனைக்கு ஏற்ப மின்கட்டணத்தை செலுத்துவது எமது பொறுப்பாகும்.எனவே சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்துவதற்கான வழியை காண தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
வைத்தியசாலை சேவை என்பது வருமானத்திற்கு பயன்படுத்த முடியாத சேவை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.