ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP27) பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி தற்போது செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மற்றும் நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் மற்றும் காலநிலை அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் ஜனாதிபதி இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியுடன், ஜனாதிபதியின் சுற்றாடல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகுிறது.
COP27 உச்சிமாநாடு நவம்பர் 6 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 18 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது