Our Feeds


Tuesday, October 11, 2022

SHAHNI RAMEES

இஸ்லாமாபாத்தை தங்களது 2ஆவது தலைநகராக மாற்றுவோம் – தலிபான்கள் எச்சரிக்கை


 பாகிஸ்தான் மீது ஆயிரக்கணக்கானோர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், பாகிஸ்தான் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்தால், இஸ்லாமாபாத்தை தங்களது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என்றும் தாலிபன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பயங்கரவாதம் மற்றும் எல்லைப்பிரச்சனைகளில் ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் தாலிபன் அதிகாரி அப்துல் பாசிர் ஷெர்சாடி, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அதில், ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுக்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 5000 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஆப்கானிஸ்தானை எவ்வாறு பாதுகாப்பது என்பது தங்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »