Our Feeds


Saturday, October 29, 2022

SHAHNI RAMEES

ரஞ்சன் இன்று (29) அதிகாலை அமெரிக்கா பயணம்..!

 

நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தடை நீக்கப்பட்டதையடுத்து, ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (29) அதிகாலை அமெரிக்கா சென்றதாக விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 03.50 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானம் ஊடாக KR-663 இல் கட்டாரின் டோஹாவிற்கு புறப்பட்டார்.

அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 10 இசை நிகழ்வுகளிலும், கனடாவில் 05 இசை நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க நேற்று முன்தினம் (27) இரவு அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், ஆனால் நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட விமானத் தடை காரணமாக மீண்டும் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »