துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள 24 மாடி கட்டிடத்தில்
பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.ஃபிகிர்டெப் பகுதியில் உள்ள வானளாவிய அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென பக்கவாட்டில் உள்ள அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியாத நிலையில், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்தது.