Our Feeds


Tuesday, October 11, 2022

SHAHNI RAMEES

கார் மற்றும் ஜீப் வாங்கிய 20 வயது இளைஞன் கைது.!



சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தின் மூலம்,

65 இலட்சம் ரூபா மதிப்புள்ள வேன் மற்றும் 2.5 கோடி ரூபா பெறுமதியான ஜீப் என்பவற்றை கொள்வனவு செய்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இவர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


சட்டவிரோதமான முறையில் தனது தந்தை சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தியே குறித்த இளைஞர் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »