இந்தோனேஷிய கால்பந்தாட்ட போட்டியின் போது கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கியதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் மோதலிலும், கலவரத்திலும் சிக்கி குறைந்தது 174 பேர் கொல்லப்பட்டதோடு சுமார் 180 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் உலகின் மிக மோசமான விளையாட்டரங்குகளி்ல் இடம்பெற்ற பேரழிவுகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.