தேர்தல்களை பிற்போடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது
தொடர்பான விசேட சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 எதிர்கட்சிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியினை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சந்திப்பில், பங்கேற்றிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதன்போது, உடனடியாக பொதுத் தேர்தலையோ அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலையோ நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.