Our Feeds


Friday, October 28, 2022

Anonymous

15 வயது இளைஞனின் மரண தண்டனையை மாற்றிய மேன் முறையீட்டு நீதிமன்றம்..!

 

 

இளைஞர் ஒருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, 7 வருட கடூழியச் சிறைத் தண்டனையாக மாற்றி மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

18 வயதுக்கு உட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2021 ஆம் ஆண்டு தண்டனை சட்டக் கோவைக்கு கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களை மையப்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.




‘குற்றஞ்சாட்டப்பட்டவர் 15 வயதுடைய நபராக இருந்த நிலையில், அவரை குற்றவாளியாக நீதிமன்றம் கண்டுள்ளது. எனினும் 18 வயதுக்கு கீழ்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்துவது தண்டனை சட்டக் கோவையின் 53வது பிரிவின் விதிகளை மீறுவதாகும். எனவே குற்றவாளிக்கு மேல் நீதிமன்றால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை வலுவிழக்கச் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஆகவே மனுதாரருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்படுகிறது.’ என நீதிபதிகள் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கிரிக்கெட் விக்கட்டினால் தாக்கி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி உயர் நீதிமன்றத்தில் ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். அதன்படி வழக்கு விசாரணைகளின் பின்னர் கொலை குற்றவாளியாக பிரதிவாதியைக் கண்ட மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனைக்கு எதிராக குற்றவாளி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »