24 வயதான மேற்படி இளைஞர், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் கான் அல்லது அஜய் அல்லது கான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தி ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
மீனவர்கள் மூலம் இவர் குறித்த தகவல்கள் கிடைத்ததையடுத்து அவரை தமிழக பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தி ஹிந்து பத்திரிகையிடம் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மன்னாரைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பமொன்றினால் வாடகைக்கு பெறப்பட்ட படகு மூலம் 3 நாட்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து கான் புறப்பட்டுள்ளார்.
ஆவர்கள் அரிச்சல்முனைக்கு அருகில் 5 ஆவது தீவை நெருங்கிய போது, நடுக்கடலில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. அதையடுத்து, கான் கடலில் குதித்தார்.
5 பேர் கொண்ட குடும்பம் வெள்ளிக்கிழiமை மண்டபம் கரையை அடைந்தது. இந்த இளைஞருக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்படி இளைஞனை அவானித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அவரை பொலிஸார் கரைக்கு அழைத்து வந்தனர்’ எனத் தெரிவித்துள்ளார்.