பல லட்சம் கொவிட் 19 தடுப்பூசிகள் இம்மாத முடிவில் காலாவதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலாவதியாகவுள்ள கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் இம்மாதம் (ஒக்டோபர்) 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் என்று அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
காலாவதியாகவுள்ள தடுப்பூசிகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.