10 ரொட்டிகளும், ஒரு மென்பான போத்தலும் 10 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விலைபோன சம்பவம் மாத்தளை – பகமுனையாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிராம மரண சங்கமொன்றுக்கு நிதி வழங்கும் வகையில் இந்த ஏலம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2021 ஆம் ஆண்டு தோற்றிய மாணவி கே. தினுஷிகா பெனாண்டோ என்பவர் இந்த ஏலத்தை நடத்தியுள்ளார்.
இவர் கலைப் பிரிவில் கற்று – மூன்று ‘ஏ’ தர சித்திகளைப் பெற்று, மாத்தளை மாவட்டத்தில் 34 ஆவது இடத்தையடைந்துள்ளார்.
தினுஷிகாவின் சிறப்பான அறிவிப்பு காரணமாகவே இந்த ரொட்டி மற்றும் மென்பானம் – இந்த தொகைக்கு ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.