வாட்ஸ் அப் செயலி (APP) நாளுக்கு நாள் புதுமைமிக்க புதிய வசதிகளை பாவனையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.
இதன்படி, கூட்டு வீடியோ தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் வகையில் (Group Video Call) தற்போது அதிவுயர் தொழில்நுட்பத்துடனான புதிய வசதியை வழங்கவுள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வசதி இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புதிய வசதிக்கான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கூட்டு வீடியோ தொலைபேசி அழைப்பு வசதியானது, முழுமையான பாதுகாப்பை வழங்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.