பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்ணனி மற்றும் சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் கையெழுத்துப் போராட்டம் இன்று (29) மட்டக்களப்பு – ஏறாவூர் நகரில் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் நடைபெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ்.நழீம் உட்பட மூவின மக்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கினர்.
செங்கலடி நிருபர்