கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
சுகாதார அமைச்சுக்கு அண்மித்த பகுதியில் போராட்ட பேரணி சென்ற வேளையிலேயே இந்த கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டது.