(அஷ்ரப் ஏ சமத்)
சவுதிஅரேபியாவின் 92வது தேசிய தினம் 23ம் திகதி இரவு கொழும்பில் உள்ள சங்ரில்லா ஹோட்டலில் வெகு விமா்சையாக நடைபெற்றது.
கடந்த வாரம் புதிய துாதுவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் துாதுவா் கடிதத்தினை பொறுப்பேற்ற காலித் ஹமவுட், நசாா் அல்சான் அல் ஹட்டானி அவா்கள் தலைமையில் தேசிய சுதந்திர தினம் கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம மந்திரி தினேஸ் குணவா்த்தன, சபாநாயகர் ,மகிந்த யாபா அபேவர்த்தன, நீதியமைச்சா் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, சுற்றாடல் அமைச்சா் ஹாபீஸ் நசீர் அஹமட் சுகாதார அமைச்சா் கேகிலிய ரம்புக்கலவெல, கலகெட அத்தே ஜானசாரத் தேரா், கங்காரம பன்சலையின் பிரதானி கலாநிதி கிரிந்த அஸ்சாச் தேரா், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் மனுச நானயக்கார, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் றிசாத் பதியுத்தீன், முஸ்லிம் நாடுகளின் துாதுவா்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அத்துடன் சவுதி தேசிய கீதம், சவுதி கலாச்சார நிகழ்வுகளும் ஸ்கிரின் வழியாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் தேசிய தின கேக்கினை சவுதி துாதுவருடன் இணைந்து அதிதிகள் பகிா்ந்து கொண்டனா்.