ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பணியாற்றுவதற்காக, தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.
குறித்த அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.