அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண
இருபதுக்கு 20 தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.அதன்படி, ஐசிசி இருபதுக்கு 20 உலக்கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறுதிப் போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதேபோல், அரையிறுதியில் வௌியேறும் அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளன.