உடுவே தம்மாலோக தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற வழக்கு ஒன்றிற்கு தம்மாலோக தேரர் ஆஜராகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை முன்னாள் அமைச்சர் மிலிந்த் மொரகொட உள்ளிட்டோர் முன்வைத்துள்ளனர்.
தம்மாலோக தேரரின் ஆலயத்தில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கை அக்டோபர் 31-ம் திகதி மீண்டும் விசாரணை செய்ய நீதிமன்றம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.