Our Feeds


Monday, September 26, 2022

ShortNews Admin

BREAKING: ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி



ரஷ்யாவில் பாடசாலையொன்றில் இன்று  நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தபட்சம் 9 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


ரஷ்யாவின் மத்திய பிராந்தியத்திலுள்ள ஐஸேவ்ஸ்க் (Izhevsk) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றதாக ரஷ்ய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஐவர் சிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்;க்கப்படுவதாக அவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய  உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »