ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கல்வி நிலையமொன்றில் இன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் தஸ்த் ஈ பார்ச்சி பிரதேசத்தில் உள்ள, காஜ் உயர் கல்வி நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையத்தில் பெரும்பாலும் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சைக்கு தயாராகும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்பிப்பது வழக்கமாகும்.
மாணவர்கள்; பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது தற்கொலை குண்டுததாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் பேச்சாளர் காலித் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் 19 பேர் பலியானதுடன் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
நன்றி: மெட்ரோ நியுஸ்