மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நகர அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்க விரும்பவில்லை எனவும், ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவை வழிநடத்த யாரும் இல்லாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
மேலும் நகர அபிவிருத்தி விடயத்தில் கோட்டாபயவின் அனுபவமே இந்தப் புதிய அணுகுமுறைக்கு வழிவகுத்துள்ளதாகவும், ஜனாதிபதி இலங்கை வந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச இந்தக் கோரிக்கையை முன்வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியாக பதவி வகித்து அமைச்சராக பதவியேற்பது பொருத்தமற்றது என சிலர் கோட்டாபயவிடம் சுட்டிக்காட்டிய போதிலும், கோட்டாபய மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில் தவறில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சவின் எதிர்காலம் குறித்து நிறைய யோசித்ததன் பின்னரே இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு கோட்டாபய இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.