Our Feeds


Wednesday, September 21, 2022

SHAHNI RAMEES

யுக்ரைனில் கைப்பற்றிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டம்


 யுக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பாக அப்பிராந்திய மக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள, 4 யுக்ரைனிய பிராந்தியங்களில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டுமா என அங்குள்ள வாக்காளர்களிடம் கேட்கப்படவுள்ளது.


லுஹான்ஸ்க், டோனட்ஸ்க், ஸபோரிஸ்ஸியா, கேர்சன் ஆகிய பிராந்தியங்களில் இவ்வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.


இப்பிராந்தியங்கள் யுக்ரைனின் நிலப்பரப்பில் சுமார் 15 சதவீதத்தை உள்ளடக்கியதாகும். அது ஏறத்தாழ ஹங்கேரி நாட்டின் பரப்பளவுக்கு சமமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா இவ்வாறு அவசர வாக்கெடுப்பு நடத்துவதற்கு அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன.


இவ்வாக்கெடுப்பை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது என அமெரிக்காவி;ன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலீவன் கூறியுள்ளார்.


யுக்ரைனின் ஒரு பிராந்தியமாக இருந்த கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் பின்னர் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »