Our Feeds


Tuesday, September 6, 2022

Anonymous

இஸ்லாமிய ஹலால் தொழில்துறையின் மிகப்பெரிய கண்காட்சியில் கலந்து கொண்டது இலங்கை!



இந்தோனேஷியாவில் நடைபெற்ற இஸ்லாமிய ஹழால் மாநாட்டில் இலங்கையும் பங்கேற்றதுடன் தமது பங்கேற்பு வெற்றிகரமாக இருந்ததாக இலங்கை நிறுவனங்கள் தெரிவித்துள்ள.


பி.டி. எக்ஸ்போ ப்ரைட் - ஈ.எப்.எல், பி.டி. அட்வான்டிஸ் அகாசா மற்றும் ஹேலிஸ் அவென்ச்சுரா (பிரைவேட்) லிமிடெட் ஆகிய மூன்று இலங்கை நிறுவனங்கள் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ´முஸ்லிம் வாழ்க்கை வர்த்தகம் 2022´ கண்காட்சியில் தமது தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்தின.


2022 ஆகஸ்ட் 26 - 28 வரை இந்தோனேசியாவின் கன்வென்ஷன் கண்காட்சி பி.எஸ்.டி, டாங்கராங், இந்தோனேசியாவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி, சுமார் 42,000 பார்வையாளர்களை ஈர்த்தது.

முஸ்லிம் லைஃப் டிரேட் 2022 என்பது இந்தோனேசியாவின் இஸ்லாமிய மற்றும் ஹலால் தொழில்துறையின் மிகப்பெரிய வணிகக் கண்காட்சி ஆகும். பி.டி. லிமா நிகழ்வு இந்தோனேசியாவின் அமைப்பாளராக இந்தோனேசிய இஸ்லாமிய வணிகம் மற்றும் தொழில்முனைவோர் சமூகம் இணைந்து இந்த நிகழ்வை நடாத்தியது.

இந்தக் கண்காட்சியில் எகிப்து, ஈரான், ஜப்பான், மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கண்காட்சியாளர்கள் உட்பட 300 கண்காட்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

பி.டி. எக்ஸ்போ ப்ரைட் - ஈ.எப்.எல். மற்றும் பி.டி. அட்வான்டிஸ் அகாசா ஆகியவை கப்பல் சரக்குப் போக்குவரத்து சேவைகளை ஊக்குவித்ததுடன், ஹேலிஸ் அவென்ச்சுரா (பிரைவேட்) லிமிடெட் தொழில்துறை தயாரிப்புக்களை ஊக்குவித்தது. ஏராளமான வணிக இணைப்புக்களை உருவாக்குவதற்கு வழிவகுத்தமையினால், கண்காட்சியில் தமது பங்கேற்பு வெற்றிகரமாக இருந்ததாக இந்த நிறுவனங்கள் கருதுகின்றன.

AD

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »