திருமணமான பெண்ணைப் போலவே திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போழுது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சட்டப்பூர்வமாக பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியுடையவர்களாவார்கள் என்றும் திருமணமாகாத பெண்களுக்கும் 20 முதல் 24 வார கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என கூறியுள்ளது. கருக்கலைப்பு விதிகளில் திருமணமாகாத பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிபதி கூறியுள்ளார்.
மேலும் திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதியின்றி, கணவன்மார்களால் ஏற்படும் பாலியல் வன்கொடுமையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் கருக்கலைப்புக்கான விதிகளின் கீழ் (marital rape) என எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், திருமணமான பெண்ணைப் போலவே திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்டிபி சட்டத்தின் விளக்கம் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என கூறியள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமூகம் மாறும்போது சமூக இயல்புகள் மாறுகின்றன. உருவாகின்றன மற்றும் சட்டங்கள் நிலையானதாக இருக்கக்கூடாது மற்றும் காரணத்தை முன்னெடுக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.