Our Feeds


Tuesday, September 6, 2022

SHAHNI RAMEES

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது


 ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதி பகுதியில் குறித்த பெண் தனது நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.


குறித்த பெண் கைது செய்யப்பட்டபோது குறித்த இடத்தில் 23 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல ரோமானிய வேலை விண்ணப்பங்களையும் கண்டுபிடித்தனர்.


ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேகநபர் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.


சந்தேக நபர் இவ்வாறான செயற்பாடுகளுக்காக ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், 500,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளிலும், கடுமையான பிணை நிபந்தனைகளிலும் விடுவிக்கப்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »