கிரிபத்கொட பிரதேசத்தில் மாணவன் ஒருவனை தாக்கிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரனவீரவின் மகன் உள்ளிட்டவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் உத்தியோகபூர்வ வாகனத்தில் வந்தே இந்த தாக்குதலை குறித்த குழு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரனவீர வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ வாகனத்தை தனது மகன் எடுத்து வந்தமை தவறு என கூறிய அவர் இதற்காக தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார்.
பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்கவே பெற்றோர் என்ற வகையில் தான் விரும்புவதாக கூறிய அவர் மாணவர் பருவத்தில் இதுபோன்ற அடிதடி சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறினார்.
இந்த விடயத்தில் சட்டத்தை அமுல்படுத்துமாறு தான் காவல் துறையிடம் கோருவதாக அவர் கூறினார்.