(இராஜதுரை ஹஷான்)
இரவு 10 மணிக்கு பிறகு அறையில் உறங்குவதற்காக சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தரவில்லை. அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
மதக் கொள்கையை கடுமையாக பின்பற்றும் சவூதி அரேபியா புதிய சிந்தனைக்கமைய கசினோ சூதாட்டத்தை ஆரம்பிக்கயுள்ள நிலையில் நாம் ஏன் புதிய சிந்தனைக்கமைய செயற்பட கூடாது. கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இரவு பொருளாதாரம் தொடர்பில் நான் குறிப்பிட்டதை ஒருசிலர்விபசாரம் என தவறான நினைத்துக் கொண்டார்கள். இரவு பொருளாதாரத்தில் விபசாரம் என்பது ஒரு பகுதி மாத்திரமே.விபசாரம் 24 மணிநேரமும் இடம்பெறும் ஒரு வியாபாரமாகும். விபசாரத்துக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் உள்ளன.
இரவு பொருளாதாரத்தில் கசினோ சூதாட்டம்,பல்பொருள் காட்சி கூடங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இதற்குள் உள்ளடங்கும். மக்கள் பகலில் சம்பாதிப்பதை இரவில் செலவு செய்தால் அரசாங்கத்துக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்றார்.