ஜா- எல பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தால் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட யுவதி ஒருவர் உயிரிந்தார் எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை குறித்த விசாரணைகள் நிறைவு பெறும்வரை சம்பவத்துடன் தொடர்புடைய மருத்துவரின் சத்திர சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் பின்னர் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேகத்துக்குரிய வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட முன்னைய சத்திர சிகிச்சைகளினால் நோயாளர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த யுவதி திருமணம் செய்து 17 நாட்களின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உடபடுத்தப்பட்டபோதே அவர் உயிரிழந்தார்.