தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) இன்று (09)அறிவித்துள்ளது.
ஜெனரேட்டர்கள், புல்வெட்டிகள் மற்றும் பிற உபகரணங்கள் போன்ற வாகனம் அல்லாத வகைகளுக்கு QR மூலம் எரிபொருள் விநியோகத்தை இதன் மூலம் செயற்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விளக்கம் கொண்ட தகவல்கள் விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.