கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையான பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி நாளை (01) இரவு 10.00 மணி முதல் நாளை மறுதினம் (02) மாலை 05.00 மணி வரை வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையான பகுதி மூடப்படும்.
மேலும், வீதியின் அந்தப் பகுதியைச் சுற்றி வசிப்பவர்களின் போக்குவரத்திற்காக குறிப்பிட்ட நேரம் அனுமதி வழங்கப்படும்.
இந்த காலப்பகுதியில் கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் வெல்லம்பிடிய சந்தியில் இருந்து கொலன்னாவை ஊடாக கொதட்டுவ நகர், கொட்டிகாவத்தை சந்தியிலிருந்து மீண்டும் அவிசாவளை வீதிக்கு பயணிக்க முடியும்.
மேலும், அவிசாவளையில் இருந்து வரும் வாகனங்கள் கொட்டிகாவத்தை சந்தியில் கொதடுவ நகர், கொலன்னாவை ஊடாக வெல்லம்பிட்டிய சந்தியின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்க முடியும்.
கடுவெல முதல் ஒருகொடவத்தை வரையிலான நிலத்தடி நீர் குழாய் அமைப்பு தயாரிக்கும் பணியின் காரணமாக இந்த வீதி மூடப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.