Our Feeds


Friday, September 30, 2022

ShortNews Admin

புனர்வாழ்வு பணியகம் தொடர்பில் போராட்டக்காரர்கள் அச்சம்! - நீதிமன்றம் சென்ற சட்டத்தரணி!



புனர்வாழ்வுப் பணியகத்தை அமைப்பதற்காக அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் போராட்ட (அரகலய) எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு வழி வகுக்கும் என்று சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


போராட்ட செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு முகாம்களில் நீண்டகாலம் தடுத்து வைக்க இந்த சட்டமூலம் அனுமதிக்கும் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, புனர்வாழ்வு பணியகம் என்ற சட்டமூலத்தை செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

போதைப்பொருள் சார்ந்தவர்கள், முன்னாள் மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள், வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள், மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே பணியகத்தின் நோக்கமாக இருக்கும் என்று இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.

இந்தநிலையில் பணியகத்தின் நிர்வாகம், முகாமை மற்றும் விவகாரங்களின் கட்டுப்பாடு ஆகியவை சபை ஒன்றிடம் ஒப்படைக்கப்படும்.

அத்துடன் பணியகம், பாதுகாப்பு செயலாளர், சுகாதாரம், கல்வி மற்றும் மறுவாழ்வு கூடுதல் செயலாளர்களையும் கொண்டிருக்கும்.

கூடுதலாக, புனர்வாழ்வு அமைச்சர் மூன்று உறுப்பினர்களை நியமிப்பார்,

அவர்கள், கல்வி, தொழில்முறை தகுதிகள் மற்றும் புனர்வாழ்வு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,

மேலும் சபையின் தலைவரை நியமிக்கவும் நீக்கவும் புனர்வாழ்வு அமைச்சருக்கு உரிமை உள்ளது.

இந்த சட்டமூலத்தின்படி, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் எந்தவொரு உறுப்பினரையும் புனர்வாழ்விற்காக வழிநடத்தும் அதிகாரம் பணியகத்திற்கு வழங்கப்படும்.

இதேவேளை இன்று சட்டமூலம் நாட்டை இராணுவ மயப்படுத்தலுக்கு இட்டு செல்லும் என்றும் இது அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியும் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அமில எகொடமஹவத்த இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »