சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூடையின் விலை 21,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படவுள்ள கோதுமை மாவை பெற்றுக்கொண்டதன் பின்னர் கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.