நீண்டநாட்களுக்கு பிறகு பொதுநிகழ்ச்சியில் சீன
ஜனாதிபதி ஜி ஜின்பிங் தோன்றி, தன்னைப்பற்றிய வீட்டுக் காவல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவின.
சீனாவில் என்ன நடக்கிறது என்று தெளிவாக தெரியவராத நிலையில், அங்கு ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும் சில சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் பீஜிங்கில் நடைபெற்ற கண்காட்சியை ஜின்பிங் பார்வையிட்ட காட்சியை அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த 16 ஆம் திகதி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பங்கேற்ற பிறகு முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் ஜின்பிங் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.