மத்தள சர்வதேச விமான நிலையம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தி வருவதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஒரு முதலீட்டாளர் அங்கு முதலீடு செய்ய விரும்பினால் அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று, நாடு முழுவதும் பரவி வரும் போராட்டங்கள் போன்ற காரணங்களால் விமானப் போக்குவரத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையங்கள் திட்டமிட்டபடி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.