கண்டி பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் மூன்று அதிகாரிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரிகளும் உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.
பொலிஸ் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு கான்ஸ்டிபிள்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரிகளும் வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்திற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் பொதுமக்கள் சேவை, கண்டி பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவில்லை என கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி, அண்மையிலேயே கண்டி பொலிஸ் தலைமையகத்திற்கு சேவையில் அமர்த்தப்பட்டமையினால், அவருக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என அறிய முடிகின்றது.
அத்துடன், நீதிமன்ற நடவடிக்கை தொடர்பிலான கடமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனை கருத்திற் கொண்டு, ஏனைய இரண்டு அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்படவில்லை. (TC)