அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை
என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் போராட்டம் நடப்பதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக உள்ளூர் பொலிஸாரிடம் போராட்டத்திற்கான அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.