மேல் மாகாண தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய தமிழ் கூட்டணியொன்றை உருவாக்க திட்டமிடப்படுகின்றது.
முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
மேல் மாகாண தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்ற பல தேவைகள் முன்னெடுக்கபடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளுக்கு அப்பால் நடைமுறை பிரச்சனைகளும் உள்ளதாக தமிழ் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை அடிப்படையாக கொண்டு ஒற்றுமையான கூட்டணி ஒன்றினை உருவாக்க ஜனநாயக மக்கள் காங்கிரஸ் புதிய முயற்சியினை முன்னெடுக்க உள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் ட்ரூ சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
இதன் முதற் கட்டமாக ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பணிமனையில் நாளை (செப்.28) மாலை விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ட்ரூ சிலோன்