Our Feeds


Thursday, September 8, 2022

SHAHNI RAMEES

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் இன்று விவாதத்திற்கு




சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச்

சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு இன்று (08) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியதால் இது தொடர்பான விவாதத்தை இன்று நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.


இவ்விடயம் தொடர்பில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதால் விவாதம் நடத்தப்படுவதன் அவசியம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ அநுர குமார திஸநாயாக மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா ஆகியோர் கௌரவ சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.



இதற்கமைய வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் பிறிதொரு தினத்தில் நடத்தப்படவுள்ளது.


சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (06) விவாதம் இன்றி நிறைவேற்றுவதற்கு அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கொவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையாக 2022 வரவுசெலவுத்திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.



வருடமொன்றில் கூட்டுமொத்தம் நூற்றியிருபது மில்லியன் ரூபாவை விஞ்சிய இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை விநியோகஸ்தர் மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »