Our Feeds


Thursday, September 29, 2022

Anonymous

கர்ப்பிணி தாய்மாரின் கவனத்திற்கு - திரிபோஷா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு



Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க வேண்டாம் என்றும் இது தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் குடும்ப சுகாதார சேவை அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.


Aflatoxin அடங்கியிருப்பதாக பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்ட திரிபோஷா பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சிகிச்சை சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திரிபோஷாவை பயன்படுத்த முடியும் என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.


3 மாதங்களுக்கு முன்னர் திரிபோஷா நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட திரிபோஷாவில் Aflatoxin அளவு கூடுதலாக இருந்தமை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு Aflatoxin இருந்ததாக உறுதி செய்யப்பட்ட திரிபோஷா தற்பொழுது அழிக்ககப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மற்றும் திரிபோஷா நிறுவனம் உறுதி செய்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »