ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷிக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டோக்கியோவை நேற்றிரவு சென்றடைந்தார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் இன்று (27) ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.