(எம்.வை.எம்.சியாம்)
அஹுங்கல பிரதேசத்தில் நேற்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அஹுங்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலேயே இருவர் காயமடைந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
காயமடைந்தவர்கள் 24 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அஹுங்கல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இவர்கள் இருவரும் பொகஹபிட்டியவிலிருந்து ஊரகல பிரதான வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் கிடைக்க பெறவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் அஹுங்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளார்கள்.