கம்பஹா பிரதேசத்தில், பெண்ணொருவரின் கைப்பையை பறிக்க முயன்றதுடன், ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
35 வயதான மேற்படி நபர் சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா அக்கரவிட்ட பகுதியில் ஒரு பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றார். அப்பெண்ணின் கூக்குரல் கேட்டு உதவிக்கு இருவர் வந்தபோது, அவர்களில் ஒருவர் மேற்படி நபரின் கத்திக் குத்தில் பலியானார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நபரை பொலிஸார் நேற்று கைது செய்ய முயன்றபோது, அவரை சந்தேக நபர் கத்தியால் தாக்க முயன்றதாகவும், அப்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தநிலையில், மேற்படி நபர் உயிரிழந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.