ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானின் நோக்கி இன்று (செப்.26) அதிகாலை பயணித்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் ஜப்பான் நோக்கி பயணித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் சென்றுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிக் கிரியைகளில் கலந்துக்கொள்வதற்காகவே அவர் ஜப்பான் நோக்கி சென்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 217 நாடுகளைச் சேர்ந்த 700 பேர் அன்னாரது இறுதிக் கிரியைகளில் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, ஜப்பான் – டோக்கியோ நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டின் புதிய பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.